Posts

Showing posts from June, 2021
  குப்பை இ.இராஜேஸ்கண்ணன்       அவர்களுக்குப் புதிய உலகத்தைக் காண்பிக்கப்போகிறேன் என்ற ஒருவித இறுமாப்பு என் நெஞ்சை நிறைத்திருந்தது. நான் என்னுடைய அலுவலகப் பணி பணி என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் போதிலெல்லாம் வீட்டுக்குள்ளே ஒடுங்கிக்கிடந்தவர்களுக்கு இந்த நகரத்து வாழ்வுமுறை பிரமிப்பைக் கொடுக்கும். ஒரு கணவனாக எனது மனைவிக்கும் ஒரு தந்தையாக என்னுடைய பிள்ளைகள் இருவருக்கும் நான் கொடுக்கவேண்டிய உலக அனுபவங்களில் நிச்சயம் இதுவும் ஒன்று. இந்தச் தருணத்துக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். மனைவி என்னிடத்தில் அடிக்கடி சொல்லிக்கொள்வாள், பிள்ளைகளை எங்காவது வெளியே கூட்டிச்செல்லவேண்டும் என்று. அந்தக் கோரிக்கையினுள்ளே என்னவளின் உள்ளுறைந்த விருப்பும் ஒளிந்திருப்பதை அந்தக் கணங்களில் அவள் முகத்தில் மிதந்து தாழ்ந்த ஏக்க அலையில் கண்டுகொண்டவன். பாவம் அவள் சமையல், துப்பரவு, துணிதுவைத்தல், அலங்கரித்தல், தொடர்நாடகம் பார்த்தல் என்று நாளாந்த வாழ்வு செக்குமாட்டுத்தனமாக வெறுப்பைக் கொடுத்தபடி நகர்ந்தது. பிள்ளைகள்கூட பாடசாலை, ரியூசன் வகுப்புகள் என்று மாறிமாறி ஒரு தடத்தில் பயணித்து அலு...
  பாடகனின் மரணம் ஒரு புள்ளியாகச் சுருங்கிப்போனார் பரத்தார். மரண ஊர்வலங்கள் எதுவும் இதுவரை அவரை இப்படிக் கருக்கியதில்லை. இதயத்தில் கனமேற்றியதில்லை. எத்தனை மரண ஊர்வலங்களில் பறை ஒலியைக் கிழித்துக்கொண்டு சர்வஜனங்களின் காதுகளைத் திழைக்கவைத்திருக்கும் அவர் பாடிய திருவாசகவரிகள். எத்தனை தருணங்களில் அவர்களின் பாடல்களை கேட்டிருக்கின்றேன். தன் குரலோடு ஓங்கி ஒலித்த சோடிக்குரல் மௌனமாகிப்போன இழப்பின் வலி ஒருபுறம். தன் நண்பனின் வாழ்வின் இறுதிநாள் குறித்த ஆசையை நிறைவேற்றிவிட முடியாத ஏமாற்றம் - ஏக்கம் - மறுபுறம். காலம் ஒருவனது வாழ்வின் கனவுகளை எப்படித் தூக்கிப் புரட்டிப் போட்டுவிடுகின்றது? காதுகளைச் செவிடாக்கி இதயத்தின் சுவர்களை அதிரவைக்கும் ‘பாண்ட்’ ஒலியின் கொடூரம். அவர்கள் ஊதித்தள்ளும் ஊமைக் குழல்களின் அபசுரம். முகப்பிலே தாரைதாரையாக வெடித்துச் சிதறிடும் ‘சீனவெடிகள்’. முன்னே ஒருவாகனத்திலிருந்து கிளம்பிப் பரவும் ‘சனாய்’ ஓலஒலி. ஊர்வலத்தின் அந்தலையில் சோடாப் போத்தல்கள் சுமந்துவரும் வாகனத்தின் கர்ணகடூர இரைச்சல். இவற்றின் நடுவே தன்னையே தனித்துக் கொண்டு நகரமுடியாது முனகிச் செல்லும் அந்தியகால சேவைக்கான ‘...
Image
  நன்றிக்கடன்                                                                                                       இ.இராஜேஸ்கண்ணன் கோமயம் கரைத்த மஞ்சள் நீரில் காலைக் கழுவி, தலைக்கு மேலாய் பட்டும் படாமலும் நீரை விசிறித் தெளித்து, வாயிலின் குறுக்கே கிடத்தியபடி போடப்பட்டிருந்த உலக்கையைக் கடந்து கொண்டு கொள்ளிவைத்த மகனைத் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக உறவுக்காரர்களும் வீட்டு வளவினுள் நுழைந்தனர். கால்களுக்குள் தலைபுதைத்துக் கிடந்த இராமன் தலையை அண்ணார்த்திப் பார்த்தான். ஈனக்குரலால் மெல்ல அழுதான். மீண்டும் தலையை கால்களுக்குள் புதைத்து முனகலுடன் ஓய்ந்தான். கொள்ளிவைத்த மகனைக் கண்டதும் ஒரு சில பெண்கள் சிணுங்கியவாறு அவனைக் கட்டியணைத்துக் கொண்டனர். அவர்களை மெதுவாக விலக்கிக்கொண்டு நழுவியபடி வீட்டின் பின்னே அமைந்த குளியலறை நோக்கிச் சென்றான் அவன்....