.jpg)
இரை தேடல் எந்த அசுமாத்தமும் இல்லாமல் மல்லாந்து கிடந்தது செத்துப்போன தெரு. அந்த இடத்தை ஒரு சிறிய நகரமாக்கும் வல்லமை அந்தத் தெருவுக்கு இருந்தது. மேற்கிலிருந்து ஓடிவந்து வடக்கே திரும்பிச் செல்லும் அந்தப் பிரதான தெருவுடன் கிழக்கேயிருந்து ஓடிவரும் சிறிய தெருவொன்று சங்கமிக்கும் அந்தச் சந்திதான் அந்தச் சின்ன நகரத்தின் பிறப்புக்கு வாய்ப்பானது. கிழக்கிலிருந்து ஓடிவரும் சிறுதெருவுக்குச் சமாந்தரமாக, கிழக்கு மேற்காக ஒரு சிவப்பு வெள்ளை வரிகளோடு சூழ்ந்த மதில்கொண்ட பிள்ளையார் கோயில். கோயிலுக்கு எதிரே மேற்கிலிருந்து ஓடிவரும் பிரதான தெருவுக்குச் சமாந்தரமாக அதன் இடதுபுறத்தே விரிந்து கிடக்கும் பரந்த நிலத்தில் வெள்ளைக்காரன் காலத்தில் தாபிக்கப்பட்ட பிரபலம் பெற...